ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

5 hours ago 3

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதாருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article