ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் முதல் எதிரியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்ப்பு..!!

1 month ago 10

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சிமாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக வேலூர் சிறையில் இருக்கும் நகேந்திரனின் பெயர் முதல் பெயராக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த அவரது வீடு அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கக்கூடிய மேலும் இந்த கொலைக்கு மூலக்காரணம் என கூறப்படக்கூடிய பிரபல ரவுடி நகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர் ஏற்கனவே ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இதேபோல இந்த வழக்கில் கிட்டத்தட்ட வழக்கறிஞர்கள், பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் 10 பேர் என கிட்டத்தட்ட 30 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்போ செந்தில் என்பவரை போலீசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இதில் முதல் பெயராக குற்றப்பத்திரிகையில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருக்க கூடிய நாகேந்திரனின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், இரண்டாவது பெயராக சம்போ செந்தில், குற்றப்பத்திரிகையில் 3-வது எதிரியாக அஸ்வத்தாமன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் முதல் எதிரியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்ப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article