ஆம்பூர் அருகே நில அதிர்வு கிராம மக்கள் அச்சம்

4 weeks ago 7

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி, கவுண்டம்பாளையம், ஊட்டல், தேவஸ்தானம் மற்றும் துரிஞ்சிதளைமேடு ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சுமார் 3.30 மணியளவில் பலத்த வெடிசத்தம் கேட்டது. இதனால் கிராம மக்கள் வீடுகளை விட்டு அலறியபடியே வெளியே ஓடி வந்தனர். இதேபோல் உம்ராபாத், கைலாசகிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதேபோல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பொதுமக்கள் நிலஅதிர்வை உணர்ந்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று பகல் 11.30 மணியளவில் ஆம்பூர் அடுத்த கரும்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஒரு சில விநாடிகள் இந்த நில அதிர்வை நன்றாக உணர்ந்ததாகவும், நிலைதடுமாறும் வகையில் இருந்ததாக கிராம மக்கள் அச்சத்துடன் கூறியுள்ளனர்.

The post ஆம்பூர் அருகே நில அதிர்வு கிராம மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article