சென்னை: தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் நிகழ்நேர தகவல்களை அறிந்து கொள்ள “அவசரம் 108 தமிழ்நாடு” செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் மொத்தம் 1,353, 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. 108 ஆம்புலன்ஸ் சேவையின் அவசரகால உதவி, தொடர் ஆம்புலன்ஸ் அழைப்பது என தினமும் கிட்டத்தட்ட 13,000 அழைப்புகள் வருகின்றன. மேலும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சராசரியாக, ஒரு நாளில் 5,000 அவசரநிலைகளை கையாளுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் நெட்வொர்க் பயன்பாட்டை அதிகரிக்க “அவசரம் 108 தமிழ்நாடு” என்ற பெயரில் செயலி வெளியிட்டுள்ளது. இது இப்போது மருத்துவ அவசரநிலைகளுக்காக ஆம்புலன்ஸ்களைத் தேடும் நபர்களுக்கு தங்கள் மொபைல் போன்களில் வாகனங்களைக் கண்காணிக்க உதவும். 108 அவசரகால பதில் மையத்தை தங்கள் மொபைல் போன்களில் அழைப்பவர்கள் ஆம்புலன்ஸ்களின் நிகழ்நேர குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பெறுவார்கள்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: இந்த செயலியின் மூலம், அவர்கள் மக்கள் பதிவுசெய்தவுடன், மக்கள் அவசரகால பதில் மையத்தை அழைக்காமல் செயலி மூலம் ஆம்புலன்ஸ் பெறலாம். இந்த செயலி அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் மற்றும் பிற மருத்துவ வசதிகளின் விவரங்களையும் கொண்டுள்ளது.
இதை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலி மற்றும் எஸ்எம்எஸ் வசதி ஆம்புலன்ஸ்களைக் கண்காணிக்கவும், ஆம்புலன்ஸ் பைலட் அல்லது அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநருக்கு பாதை அல்லது இருப்பிடத்தில் வழிகாட்டவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆம்புலன்ஸ் நிகழ்நேர தகவல்களை ‘அவசரம் 108 தமிழ்நாடு’ செயலி மூலம் அறியலாம் appeared first on Dinakaran.