திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ரிஜாஸ் சித்திக்(28). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்தார். அது தொடர்பாக தனது சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அறிந்ததும் நாக்பூர் தீவிரவாத தடுப்புப் படை போலீசார் ரிஜாஸ் சித்திக்கை கைது செய்தனர். அவருடன் இருந்த பீகாரைச் சேர்ந்த இஷா என்ற பெண் நண்பரும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் நாக்பூர் தீவிரவாத தடுப்புப் படை போலீசார் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ரிஜாஸ் சித்திக்கின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. சோதனையில் பென்டிரைவ்கள், போன்கள் உட்பட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ரிஜாஸ் சித்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த காஷ்மீர் மாநிலம் குறித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்து கைதான கேரள வாலிபரின் வீட்டில் மகாராஷ்டிரா போலீசார் சோதனை: பெண் நண்பரும் கைது appeared first on Dinakaran.