ஆபத்தை உணராமல் எரும்பி ஏரியில் குளித்து விளையாடும் மாணவர்கள்

2 months ago 12

ஆர்.கே.பேட்டை: சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, ஆர்.கே.பேட்டை ஊராட்சிக்குட்பட்ட எரும்பி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பகுதியில், ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் ஏரியில் குளித்து ஆட்டம் போடுகின்றனர்.

ஏரிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ, நீச்சல் அடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எரும்பி கிராமத்தில் உள்ள ஏரியில் மாணவர்கள் குளித்து ஆட்டம் போடுவதை வருவாய்த்துறையினரோ காவல்துறையினரோ கண்டு கொள்ளவில்லை. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆபத்தை உணராமல் எரும்பி ஏரியில் குளித்து விளையாடும் மாணவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article