கரூர், மே22: ஆபத்தான ராமானூர் வளைவு பாதையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர்-திருச்சி தெரசா கார்னர் பகுதியில் இருந்து மருத்துவக் கல்லூரி, பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கொளந்தானூர், ராமானூர் வழியாக சென்று வருகிறது. வடக்கு காந்திகிராமம் பகுதிக்கும் இந்த பகுதியில் இருந்துதான் வாகனங்கள் செல்கிறது. இந்நிலையில், ராமானூர் அருகே மிக ஆபத்தான வளைவுபாதை உள்ளது. இந்த வளைவு பாதையோரம், டாஸ்மாக் கடை உள்ளது.
இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் அதிகளவு இந்த சாலையில் செல்கிறது. மேலும், டாஸ்மாக் கடையின் அருகே மருத்துவக் கல்லூரி, அம்மன்நகர் போன்ற பகுதிகளுக்கான சாலையும் பிரிகிறது. இதன் காரணமாக இந்த வளைவு பாதையோரம் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் வளைவு பாதையோரம் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post ஆபத்தான ராமானூர் வளைவு பாதையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.