
புதுடெல்லி,
வௌிநாட்டு இணையதளங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் வர்த்தகம் மற்றும் சேவைகள் மூலம் பெறும் வருமானத்துக்கு மத்திய அரசு டிஜிட்டல் சேவை வரியை விதித்துள்ளது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளம்பர சேவைகளுக்கு 2 சதவீத சமன்பாட்டு வரி விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து வௌிநாட்டு நிறுவனங்கள் செய்யும் மின் வணிக பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்ட 2 சதவீத சமன்பாட்டு வரியை மத்திய அரசு நீக்கியது. ஆனால், ஆன்லைன் விளம்பரங்களுக்கு விதிக்கப்பட்ட 6 சதவீத டிஜிட்டல் வரி தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த நிலையில் ஆன்லைன் விளம்பரங்களுக்கான சமநிலை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவை மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். 2025-26ம் நிதியாண்டுக்கான நிதி மசோதாவில் செய்யப்பட்டுள்ள 59 திருத்தங்களின் ஒருபகுதியாக இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.