சென்னை: ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசு விதிகளை வகுத்திருந்தது. விதிகளை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு; எழுத்துபூர்வமான வாதங்கள் முடிந்ததால் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஒத்திவைத்தனர்.
The post ஆன்லைன் ரம்மி கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.