ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

1 month ago 8

திருமலை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் திகுவகாலிகுட்டாவை சேர்ந்தவர் பத்மநாபரெட்டி(27). பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பல்வேறு கட்டங்களாக ரூ.24 லட்சத்தை இழந்துள்ளார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 11ம்தேதி இரவு, ரெட்டிவாரிபள்ளே என்ற இடத்திற்கு சென்று அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் பத்மநாபரெட்டியின் பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ‘ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்தேன். தயவு செய்து யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது, பந்தயம் கட்டும் மாஃபியாவின் போன் நம்பர், வங்கி கணக்கு விவரங்களை சொன்னாலும், போலீசாரால் கூட ஒன்றும் செய்ய முடியாது. மன உளைச்சலால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு நானே காரணம், விடைபெறுகிறேன்,’ என உருக்கமாக எழுதியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article