ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை, 2 மகன்கள் கைது

3 days ago 1

திருவாரூர்: திருவாரூர் தியானபுரத்தை சேர்ந்த பக்கிரிசாமி மனைவி கமலா (55). அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மீனாம்பாள். கமலாவிடம் அதிகளவில் பணம் இருப்பதை அறிந்த ரங்கநாதனின் மகன்களான ஹரிஹரசுதன் (33), ராம்ஜி (31) ஆகியோர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்து 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ரூ.1.23 கோடி பெற்றனர். இதையடுத்து கமலாவை நம்ப வைப்பதற்காக அவரது மகள் நிஷாந்தியின் வங்கி கணக்குக்கு அவ்வப்போது சிறு, சிறு தொகைகளை லாபம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கமலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கேட்டார். அப்போது சில மாதங்களில் உங்களிடம் வாங்கிய பணத்தை முழுவதுமாக கொடுத்து விடுவதாக கடந்தாண்டு மார்ச் 20ம் தேதி பத்திரத்தில் ராம்ஜி எழுதி கொடுத்தார். இதற்கு சாட்சியாக அவரது தாய் மீனாம்மாள், தந்தை ரங்கநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கமலா கடந்த மாதம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தபோது கமலாவிடம் வாங்கிய பணத்தில் திருவாரூர், சென்னையில் வீடு மற்றும் சில சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்தது. இதுபோன்று ேமலும் சிலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரங்கநாதன், ஹரிஹரசுதன், ராம்ஜி ஆகியோரை நேற்று கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

The post ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை, 2 மகன்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article