ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது : அறங்காவலர் குழு தலைவர் தகவல்

3 weeks ago 5

Anaimalai, Masaniamman Templeஆனைமலை :ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா,கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்கு, செவ்வாய்,வெள்ளிமற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும்.இந்நிலையில்,ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை இந்தாண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக கோவில் கோபுரங்களின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 12-ம் தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறுகையில்: கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுற்றதால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.இதையடுத்து வரும் டிசம்பர் 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியில் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது\” என்றார்.முன்னதாக கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை கோவில் அறங்காவலருடன், உதவி ஆணையர் கைலாச மூர்த்தி,அறங்காவலர்கள் தங்கமணி,திருமுருகன்,மஞ்சுளாதேவி,மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜுனன்,புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

The post ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது : அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article