ஆனித்திருவிழா தேரோட்டம்: நெல்லையில் போக்குவரத்து மாற்றம்

4 hours ago 3

நெல்லை,

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, நெல்லையில் அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்ததில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சந்திப்பு பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் வழியாக மானூர் மார்க்கம் செல்லும் வாகனங்கள், ஸ்ரீபுரம், ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன் ரோடு வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுன்ட் ரோடு, வழுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியப்பேரி, ராமையன்பட்டி சாலை சந்திப்பு, ராமையன்பட்டி விலக்கு வழியாக செல்லவேண்டும்.

மானூர், ஆலங்குளம் மார்க்கம்

மானூர் மார்க்கத்தில் இருந்து நெல்லை டவுன் வழியாக சந்திப்பு பஸ் நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள், பஸ்கள் ராமையன்பட்டி விலக்கு, குருநாதன் கோவில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம் தியேட்டர் சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.

புதிய பஸ்நிலையத்திலிருந்து ஆலங்குளம் மார்க்கமாக தென்காசி, செங்கோட்டை வரை செல்லும் வாகனங்கள், புறநகர் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீபுரம், டவுன் ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன் சாலை வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுன்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வந்து வழுக்கோடை வழியாக செல்ல வேண்டும்.

தென்காசி மார்க்கம்

தென்காசி மார்க்கத்திலிருந்து புதிய பஸ்நிலையம் வரும் பஸ்கள் பழைய பேட்டை கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி ராமையன்பட்டி விலக்கு, சத்திரபுதுக்குளம், சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

தென்காசி மார்க்கத்திலிருந்து நெல்லை சந்திப்பு வரும் நகர பஸ்கள் பழைய பேட்டை, கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து வலதுபுறமாக திரும்பி குருநாதன் கோவில் சந்திப்பு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம்தியேட்டர், சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.

அம்பை, பாபநாசம்

புதிய பஸ்நிலையத்தில் இருந்து சேரன்மாதேவி மார்க்கமாக அம்பை, பாபநாசம் வரை செல்லும் வாகனங்கள், பஸ் அனைத்தும் ஸ்ரீபுரம், டவுன் ஆர்ச் வந்து இடதுபுறம் திரும்பி நெல்லை கண்ணன் ரோடு, வழியாக அருணகிரி தியேட்டர், தெற்கு மவுன்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வந்து பேட்டை வழியாக செல்ல வேண்டும்.

பாபநாசம், சேரன்மகாதேவி மார்க்கத்திலிருந்து டவுண் வழியாக புதிய பஸ்நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் பேட்டை, கோடீஸ்வரன்நகர், வலுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி ராமையன்பட்டி விலக்கு, சத்திரபுதுக்குளம் சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலை வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ்நிலையம் செல்ல வேண்டும்.

சேரன்மகாதேவி மார்கத்திலிருந்து டவுன் வழியாக சந்திப்பு பஸ் நிலையம் செல்லும் நகர பஸ்கள் பேட்டை, கோடீஸ்வரன்நகர், வழுக்கோடை சந்திப்பு வந்து இடதுபுறம் திரும்பி லாலுகாபுரம், கண்டியபேரி சாலை வழியாக ராமையன்பட்டி சாலை சந்திப்பு வந்து வலதுபுறமாக திரும்பி குருநாதன் கோவில் விலக்கு, புதுப்பாலம், தச்சநல்லூர் பஜார் வழியாக ராம்தியேட்டர், சந்திப்பு வந்து வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதிக்கு செல்ல வேண்டும்.

அவசரகால வாகனங்கள்

டவுன் பகுதிக்குள் வரும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம், மற்றும் மீட்பு அவசரகால வாகனங்கள் அனைத்தும் சொக்கப்பனை கார்னர், சத்தியமூர்த்தி தெரு, வ.உ.சி தெரு, மற்றும் குளப்பிறை தெரு வழியை அவசர வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் பாபநாசம் மற்றும் தென்காசி மார்க்கத்தில் இருந்து வரும் அவசர கால வாகனங்கள் அனைத்தும் வழுக்கோடை சந்திப்பு, தொண்டர்சன்னதி, புட்டார்த்தி அம்மன் கோவில் சந்திப்பு, வடக்கு மவுண்ட் சாலை டவுன் ஆர்ச் வழியை அவசர வழியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article