ஆனி திருமஞ்சன விழா

12 hours ago 2

பரமத்திவேலூர், ஜூலை 4: பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நேற்று தேவாரம் திருவாசகம் ஓதூதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடந்தது. விழாவையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் மற்றும் அப்பூதியடிகள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், மகேஸ்வர பூஜை மற்றும் அன்னம்பாலிப்பும் நடந்தது. விழாவில் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அடியார்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

The post ஆனி திருமஞ்சன விழா appeared first on Dinakaran.

Read Entire Article