ஆந்திராவில் நடிகைக்கு தொல்லை; முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

4 weeks ago 4

அமராவதி,

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு புகார் கொடுத்தார். ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு தொழில் அதிபர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதுடன், விசாரணை என்ற பெயரில் முறையான விசாரணையின்றி தன்னை கைது செய்து தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறி இருந்தார்.

இந்த புகார் குறித்து ஆந்திர சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரில் விசாரணை நடத்தி 3 மூத்த ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஆந்திராவின் முன்னாள் உளவுத்துறை தலைவர் பி.சீதாராம ஆஞ்சநேயலுவும் ஒருவர். விஷால்குன்னி மற்றும் காந்தி ரத்தன் டாடா ஆகியோர் மற்ற 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளாவர்.

இந்த நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆஞ்சநேயலுவை ஆந்திர சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். அதுகுறித்த பதிவை எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் குக்கலா வித்யாசாகர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article