பொன்னேரி: ஆந்திராவில் மூதாட்டியை கொலை செய்து, உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் எடுத்து வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்த தந்தை மற்றும் மகளை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(43). இவரது மகள் தேவிஸ்ரீ(17). இவர்கள் இருவரும் நேற்று (நவ.4) இரவு, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை -சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்தனர். அப்போது, மின்சார ரயில், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றபோது, தந்தையும், மகளும் பெரிய சூட்கேஸுடன் இறங்கினர்.தொடர்ந்து, அவர்கள் சூட்கேஸை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துவிட்டு, தனியாக நடந்து சென்றனர். இதுகுறித்து, பயணிகள் சிலர், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.