ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது

4 weeks ago 4

திருத்தணி: ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரும் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படையினர் மற்றும் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இணைந்து கடந்த 2 நாட்களாக திருத்தணி அருகே சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தில் சோதனை செய்ததில் பேருந்தின் இருக்கைக்க அடியில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ 700 கிராம் கஞ்சா, 10 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2 வாலிர்களை திருத்தணி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், சென்னை புனித தோமையார்மலையை சேர்ந்த அருண்பாண்டியன் (28), நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்த திலீபன் (28) என்று தெரிய வந்தது. பிறகு அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தல்: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article