*முன்னேற்பாடுகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு
சித்தூர் : முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை குப்பம் தொகுதிக்கு வருவதையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கலெக்டர், எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் 21ம் தேதி(நாளை) நடைபெறும் திருப்பதி பிரசன்னா கங்கமாம்பாகெங்கை அம்மன் திருவிழாவுக்கு வருகை தர உள்ளார்.
இதற்காக கலெக்டர் சுமித் குமார் மற்றும் எஸ்பி மணிகண்டா மற்றும் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் முதல்வர் வருகையை முன்னிட்டு நடைபெற்று வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் சுமித்குமார் பேசியதாவது:குப்பம் நகரத்தில் நடைபெறும் திருப்பதி பிரசன்ன கங்கமாம்பா கெங்கையம்மன் திருவிழாவை காண மாநில முதலமைச்சர் வருகை தர உள்ளார். மேலும் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களைச் சமர்ப்பிக்க உள்ளார்.
ஆகவே முதல்வரின் வருகையை முன்னிட்டு அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வருகையைத் தொடர்ந்து, அரசு கொறடா மற்றும் எம்எல்சி காஞ்சர்லா ஸ்ரீகாந்த், எஸ்பி மணிகண்டா ஆகியோருடன் வருகைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தோம்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு குடிப்பள்ளி மண்டலத்தில் உள்ள திராவிட பல்கலைக்கழக மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்க உள்ளார். அப்பகுதியில் தடுப்புகளை அமைப்பது, மைதானத்தில் சுகாதார மேலாண்மை மற்றும் தொடர்புடைய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் படபேட்டாவில் உள்ள ஸ்ரீபிரசன்ன திருப்பதி கங்கமாம்பா கங்கை அம்மன் கோயிலில் முதலமைச்சர் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்ததன் ஒரு பகுதியாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து கோயில் தலைவர் ரவிச்சந்திர பாபுவுடன் அரசு கொறடா மற்றும் எம்எல்சி மற்றும் எஸ்பி ஆகியோர் உடன் ஆலோசனை நடத்தினோம்.
முதல்வர் வருகையை முன்னிட்டு எந்த ஒரு பகுதியிலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் முதல்வரின் சுற்றுப்பயணம் அமைதியான முறையில் நடத்தவும் காவல்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளுக்கு கலந்துரையாடி உத்தரவிடப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் எஸ்பி மணிகண்டா, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சாந்தாராம், ஏஆர் கூடுதல் எஸ்பி நந்தகிஷோர், பிஆர்எஸ்இ சந்திரசேகர் ரெட்டி, மாவட்ட போக்குவரத்து ஆணையர் நிரஞ்சன் ரெட்டி, குப்பம் ஆடிஓ ஸ்ரீனிவாச ராஜு, ஏஆர் டிஎஸ்பி மஹ்பூப் பாஷா, குப்பம் நகராட்சி ஆணையர் னிவாச ராவ் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை குப்பம் தொகுதிக்கு வருகை appeared first on Dinakaran.