ஆந்திர அரசு பஸ்களில் வெளி மாநில மூத்த குடிமக்களுக்கும் 25 சதவீத கட்டண சலுகை

3 months ago 11

திருமலை: ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களில் வெளி மாநிலத்தை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கும் 25 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 60 வயது நிரம்பிய தகுதியான மூத்த குடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல் 25 சதவீதம் கட்டண சலுகை அனைத்து வகையான பஸ்களிலும் வழங்கும் உத்தரவை நீட்டித்துள்ளது.

எனவே பயணச்சீட்டு வாங்கும் போது பயணத்தின் போது மூத்த குடிமக்களிடமிருந்து ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மூத்த குடிமக்கள் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு வயதுச் சான்றிதழ் வைத்து டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த அறிவுறுத்தல்கள் தெரிவிக்கப்பட்டாலும், பிற மாநிலங்கள் வழங்கிய வயதுச் சான்று ஆவணங்களை (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஏற்காமல் முழுக் கட்டணம் நடத்துனர்கள் பெறுவதாக புகார்கள் வருகிறது.

எனவே இப்போது, 60 வயதை நிறைவு செய்த மூத்த குடிமக்கள், மாநிலத்தைப் பொருட்படுத்தாமல், எந்த மாநில அரசு அல்லது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் வடிவத்திலோ மேலே குறிப்பிடப்பட்ட வயதுச் சான்றிதழை வைத்து 25 சதவீதம் அனைத்து பஸ்களிலும் கட்டண சலுகையைப் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post ஆந்திர அரசு பஸ்களில் வெளி மாநில மூத்த குடிமக்களுக்கும் 25 சதவீத கட்டண சலுகை appeared first on Dinakaran.

Read Entire Article