
ஐதராபாத்,
'ஈரம்' படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஆதியுடன் கூட்டணி அமைத்து 'சப்தம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.
இந்த படத்தில் ஆதி, ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பேய்களை பற்றி தெரிந்துகொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 28-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் நானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "நான் ஏற்கனவே சப்தம் படத்தை பார்த்துவிட்டேன். நான் பார்த்த படங்களில் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.
வருகிற 28-ம் தேதி 'சப்தம்' திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து அதன் தொழில்நுட்பப் புத்திசாலித்தனத்தை அனுபவிக்கவும்," என்றார்.