ஆதிதிராவிடர்களுக்கு சேவைபுரிந்தோர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

1 month ago 5

 

பெரம்பலூர்,நவ.19: பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருதுபெறத் தகுதியுள்ளவர்கள் வருகிற 29ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் நலத் துறையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் பெயரில் பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் ” டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது“ ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டில் திருவள்ளுவர் திருநாள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் இந்த விருதினைப்பெற விண்ணப்பிக்கலாம்.

டாக்டர் அம்பேத்கர் விருதுக்குத் தகுதியான நபர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப் பங்களைப்பெற்று, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வருகிற 29ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நலஅலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர்-621212 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பயனடையுமாறு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர்களுக்கு சேவைபுரிந்தோர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article