தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.4.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 227 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்காக 18 விடுதிக் கட்டடங்கள். 46 பள்ளிக் கட்டடங்களுக்கு உட்கட்டமைப்பு வசதி, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் நீண்ட தூர கம்பியில்லா இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் 104 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 48,436 பயனாளிகளுக்கு வழங்கினார்.
திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டடங்களின் விவரங்கள்:
சென்னை, சைதாப்பேட்டை, எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டடம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் தாராபுரம், அரியலூர் மாவட்டம் மீன்சுரூட்டி, கரூர் மாவட்டம் குளித்தலை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தேனி மாவட்டம் சின்னமன்னூர் ஆகிய இடங்களில் 83 கோடியே 77 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 14 விடுதிக் கட்டடங்கள், செங்கல்பட்டு மாவட்டம் குமிழி, வேலூர் மாவட்டம் பீஞ்சமந்தை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டப்புதூர் மற்றும் சங்கராபுரம் ஆகிய இடங்களில் 14 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான 4 விடுதிக் கட்டடங்கள், என மொத்தம் 98 கோடியே 37 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 18 விடுதிக் கட்டடங்கள்.
செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 49 கோடியே 14 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிக் கட்டடங்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டம் ஆட்சிவிளாகம், கிருஷ்ணகிரி குப்பநத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் விநாயகர் தெரு. முத்தையம்பாளையம், தஞ்சாவூர் மாவட்டம் புனல்வாசல் கிழக்கு. வடபாதிமங்கலம், இராமநாதபுரம் மாவட்டம் கருமல். திண்டுக்கல் மாவட்டம் ஜி. நடுபட்டி, தூத்துக்குடி மாவட்டம் சின்ன காலனி, தென்காசி மாவட்டம் அழகாபுரி ஆகிய இடங்களில் 13 கோடி யே 9 இலட்சம் ரூபாய் செலவில் ஆதிதிராவிட மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 11 சமுதாய நலக்கூடங்கள். திருவள்ளூர் மாவட்டம் செஞ்சியம்மன் நகர், திருப்பாலைவனம், கிருஷ்ணகிரி மாவட்டம் சந்திரபட்டி, கே. கொத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் மேல்கச்சிராபட்டு, தண்டரம்பட்டு, தனிபாடி, மேல்பசர், இராணிப்பேட்டை மாவட்டம் அகவலம் ஆகிய இடங்களில் 4 கோடியே 65 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள 8 சமுதாய நலக்கூடங்கள். என மொத்தம் 17 கோடியே 74 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 19 சமுதாய நலக்கூடங்கள்.
சென்னை மாவட்டம் மாவட்டம் வேப்பேரி, சைதாப்பேட்டை, இராயபுரம், வேலூர் வேலூர், திருண்ணாமலை மாவட்டம் செய்யாறு, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் – சிதம்பரம். தருமபுரி மாவட்டம் – தருமபுரி, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை. தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் சொக்கிகுளம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, காந்திநகர். தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் குற்றாலம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி விடுதிகளில் 9 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 20 கற்றல் கற்பித்தல் கூடம். சென்னை மாவட்டம் நாகல்கேணி, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆகிய இடங்களில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி விடுதிகளில் 87 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 கற்றல் கற்பித்தல் கூடம், என மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 22 கற்றல் கற்பித்தல் கூடங்கள்.
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் 52 கோடியே 58 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 பழங்குடியினர் மக்களுக்கான குடியிருப்புகள்; என மொத்தம் 227 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் 1105 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்கள்:
ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்; அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 60 நபர்களுக்கு 21 கோடி ரூபாய் உதவித்தொகை; உயர்கல்வியில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர். பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர் புகழ்பெற்ற பயிற்சி நிறுவனங்களில் தங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் உயர்திறன் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 100 மாணவ, மாணவியர்களுக்கு 25 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை; முனைவர் ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 100 LDI1000TOJ, மாணவியர்களுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை; உயர்நீதி மன்றத்தில் சட்ட உட்பயிற்சி மாணாக்கருக்கான உதவி வழங்கும் திட்டத்தில் 30 மாணவ, மாணவியர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் உதவித்தொகை,
பழங்குடியினர் நல இயக்குநரகத்தின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் 10 சதவிகித நிதி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய பழங்குடியினர் தொல்குடி வாழ்வாதரா திட்டத்தின் கீழ் 140 பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான திறன் பயிற்சி; தொல்குடி ஐந்திணை வேளாண்மை மேலாண்மை திட்டத்தில், திருச்சிராப்பள்ளி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் சங்கங்களைச் சேர்ந்த 2500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள்; தொல்குடி ஐந்திணை வேளாண்மை மேலாண்மை மதிப்புக்கூட்டு திட்டத்தில் சிறுதானிய உற்பத்தி பெருக்குதல் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழிற்சாலை உருவாக்குதல், மீன் பண்ணை, நண்டு வளர்ப்பு மற்றும் வண்ண மீன்கள் வளர்ப்பு போன்ற மதிப்புக்கூட்டு மையங்கள் அமைத்திட 100 பயனாளிகளுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான மானியம்,
ரூ. 6.55 கோடி ரூபாய் செலவில் நீண்ட தூர கம்பியில்லா இணைப்பு திட்டம்
தொலைபேசி வழி மருத்துவம் மற்றும் தொலைபேசி வழி கல்வி மையங்கள் திருப்பத்தூரில் 17 அங்கன்வாடிகள் மற்றும் 28 தொடக்க பள்ளிகளில் 45 மையங்களும், ஈரோட்டில் தொடக்க பள்ளிகளில் 33 மையங்களும், என மொத்தம் 78 இடங்களில் தொலைபேசி வழி மருத்துவம் மற்றும் தொலைபேசி வழி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இ-சேவை மையங்கள் இத்திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 10 இ-சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது திருப்பத்தூர் வட்டாரம். புதூர் நாடு பஞ்சாயத்து கீழூரில் ஒரு இ சேவை மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீண்ட தூர கம்பியில்லா இணைப்பு திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்துர் வட்டாரம் மற்றும் ஈரோடு மாவட்டம், அந்தியூர், தாளவாடிசத்தியமங்கலம் வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 25,000 பழங்குடியின மக்கள் பயன்பெறுவர். தாட்கோ சார்பில் சிறு வணிகக் கடன் திட்டத்தின் கீழ் 2886 பயனாளிகளுக்கு 22 கோடியே 90 இலட்சம் ரூபாய் கடனுதவி; விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மகளிரை நில உரிமையாளராக அதிகாரம் அளிக்கும் வகையில் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு 25 இலட்சம் ரூபாய் கடனுதவிக்கான மானியம்: முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் கடனுதவிக்கான மானியம்: பொலிவு-விடுதி மாணாக்கருக்கான உடல் நலம் பேணும் பெட்டகம் வழங்கும் திட்டத்தில் 17,000 பயனாளிகளுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பெட்டகம்; அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 350 பயனாளிகளுக்கு 25 கோடி ரூபாய் கடனுதவிக்கான மானியம்;
என மொத்தம் 48,436 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 104 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இன்றையதினம் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 332 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பித்துள்ளார்.
முன்னதாக, சமத்துவ நாள் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழாக்கம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கர் படைப்புகளான சாதியை அழித்து ஒழித்தல் (Annihilation of Caste). இந்து மதத்தின் புதிர்கள் (Riddles in Hinduism) ஆகிய நூல்களை வெளியிட, பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மேலும், வன உரிமைச் சட்டத்திற்கான வரைபடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பிரகாஷ் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.லட்சுமிபிரியா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.332.60 கோடி மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். appeared first on Dinakaran.