வேலூர், மார்ச் 14: தலைப்பெழுத்துடன் பெயர் இல்லாவிட்டாலும் புதிய ஆதார் பதியலாம் என்று நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஆதார் சேவை மையங்கள் மூலமாக புதிய ஆதார் பதிவு, ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் எல்காட் மற்றும் தாலுகாக்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது. இந்த மையங்களில் புதிய ஆதார் பதிவு செய்யும்போது, பெற்றோர் ஆதார் அட்டையில் உள்ளது போல பிறப்பு சான்றிதழில் பெயர் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
தற்போது பெயர் முழுபெயராகவோ அல்லது தலைப்பெழுத்துடன் மற்றும் முழுபெயர், தலைப்பெழுத்து முன்னதாக பின்னர் பெயரும், தலைப்பெழுத்து பின்னதாகவும் இருந்தால் எப்படி இருந்தாலும் புதிய ஆதார் பதிவு செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர்மாவட்டத்தில் ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் நேற்று முதல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் உட்பட 7 மையங்கள், தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் ஆதார் மையங்கள் என்று அனைத்திலும் இந்த நடைமுறை தொடரப்பட்டுள்ளது என்று ஆதார் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆதார் புதிய பதிவிற்கு விலக்கு தலைப்பெழுத்துடன் பெயர் இல்லாவிட்டாலும் பதியலாம் appeared first on Dinakaran.