ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பளம்; தமிழகத்திற்கு விரைவில் வர இருக்கும் தொழில் முதலீடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

3 months ago 21

திருவாரூர்,

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான தொழில் முதலீடு விரைவில் தமிழகத்திற்கு வர இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-

"இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பளம் கொடுக்கக் கூடிய வகையிலான புதிய தொழில் முதலீடு தமிழகத்தை நோக்கி வர இருக்கிறது. அது குறித்து வெகு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article