ஆண்டிமடம் கிராம சபை கூட்டம்

3 months ago 24

ஜெயங்கொண்டம். அக்.4: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்று அதில் முக்கியமான தீர்மானங்கள் விவாத பொருட்களாக வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்டிமடம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) செந்தில்குமார் தமிழ்நாடு அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் விவாத பொருட்களாக எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ஊராட்சி செயலாளர் செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் மேல நெடுவாய் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆழ்துளை கிணறு பழுது ஏற்பட்டதால் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். ஆண்டிமடம் காட்டு கேணி பகுதியில் உள்ள குளத்தை சீர் செய்து அதனைச் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும், மேலும் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டிமடம் கடைவீதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகளை ஆண்டிமடம் காட்டுக்கேணி பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் இருந்த குப்பைமேட்டை அகற்றி அப்புறப்படுத்தி மாற்று இடம் தேர்வு செய்து அங்கு மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post ஆண்டிமடம் கிராம சபை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article