ஆண்டிபட்டி, மே 16: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மனைவி சிவசந்திரா(39). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. இவருடைய கணவர் இறந்து விட்டதால், கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கருப்பையாவுக்கும் சிவசந்திராவிற்கும் 14 வயதில் மகன் உள்ளார்.
கருப்பையா இளநீர் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கருப்பையாவின் தங்கையின் 2 பவுன் தங்க செயினை சிவசந்திராவிடம் கொடுத்து அடகு கடையில் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அடகு வைத்த நகையின் மேல் கூடுதலாக பணம் பெற வேண்டி கருப்பையா, சிவசந்திரா மற்றும் அவருடை 17 வயது மகள் ஆகிய மூன்று பேரும் ஆண்டிபட்டி நகருக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு காம்ப்ளக்ஸ் பின்புறம் கருப்பையா மற்றும் அவரது மனைவி சிவசந்திராவிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது கருப்பையா மனைவி மற்றும் சிறுமியை தாக்கியுள்ளார். அதனை தடுத்த சிறுமி கருப்பையா இளநீர் வியாபாரத்திற்காக வைத்திருந்த அருவாளை வைத்து சிறுமியின் தலையில் வெட்டினார். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமியின் தாயார் சிவசந்திரா ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ள கருப்பையாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post ஆண்டிபட்டி அருகே சிறுமியை அரிவாளால் வெட்டிய தந்தை தலைமறைவு appeared first on Dinakaran.