சிவகங்கை, ஜன. 9: சிவகங்கை அரண்மனை வாசல் முன் சிவகங்கை மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தார். இதில், நலவாரியம் மூலம் ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும். பைக் டாக்சி முறையை தடை செய்ய வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத்திற்கு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூனிஸ்ட் மாவட்ட துணைத்தலைவர் மருது, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ராஜா, ஆட்டோ சங்க நகரச் செயலாளர் பாண்டி, நிர்வாகிகள் காளைலிங்கம், மீனாள்சேதுராமன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோரிக்கைகள் சிவகங்கை தொழிலாளர் நல அலுவலகத்தில் மனுவாக அளிக்கப்பட்டது.
The post ஆட்டோ தொழிலாளர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.