ஆட்டிச குறைபாடு விழிப்புணர்வு மாரத்தான்

1 week ago 3

*மாணவர்கள், மருத்துவர்கள் பங்கேற்பு

புதுச்சேரி : ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் மருத்துவர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை சபாநாயகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.

இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு ஆட்டிசம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் மதி இறுக்கம் என்பார்கள். இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு, இந்த சமூகத்திற்கு இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள தனியார் ஆட்டிசம் சிகிச்சை மையம் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

கடற்கரை சாலையில் இந்நிகழ்ச்சியை நேற்று சபாநாயகர் செல்வம் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கடற்கரை சாலையில் இருந்து புதுச்சேரி நகர பகுதி என நான்கு கிலோமீட்டர் தூரம் ஒடி ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post ஆட்டிச குறைபாடு விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.

Read Entire Article