ஆட்சியை பிடிப்பது யார்?.. ஹரியானா, ஜம்முவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

2 hours ago 2

டெல்லி: ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இங்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தலும் இதுவே. இதனால், இதுவரையிலும் ஆளுநரின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கீழ் வர உள்ளது. இதன்காரணமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தும், பாஜ, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) உள்ளிட்டவை தனித்தும் போட்டியிட்டுள்ளன.

3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல அரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியே அரியானாவில் வெற்றி பெறும் என கணித்துள்ளன. கடந்த 10 ஆண்டாக ஆட்சி செய்யும் பாஜ மீது அரியானா விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பாஜ இம்முறை தோல்வி அடைந்து காங்கிரஸ் மீண்டும் அரியானாவில் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் மற்றும் அரியானா ஆகிய இரு மாநிலத்திலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், காலை 10 மணிக்கு யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்கிற முடிவுகள் தெரியவரும்.

The post ஆட்சியை பிடிப்பது யார்?.. ஹரியானா, ஜம்முவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article