ஆடுகளை திருடி விற்க முயன்றவர் கைது

5 months ago 30

 

திருப்பூர், அக்.9: திருப்பூர் பெருமாநல்லூர், மேற்குபதி, ஈச்சம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (67). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டி இரு ஆடுகளை ஓட்டி வந்து தோட்டத்தின அருகில் கட்டிவிட்டு மீதமுள்ள ஆடுகளை அழைத்து வர தோட்டத்துக்குள் சென்றுள்ளார்.
அப்போது காரில் வந்த நபர் ஒருவர் தோட்டத்தில் கட்டியிருந்த இரு ஆடுகளை காரின் பின்பக்கமாக ஏற்றிக்கொண்டு அவசரமாக சென்றுள்ளார். கார் தொரவலூர் நோக்கிச் சென்றதை அறிந்த விஸ்வநாதன் தனது உறவினருடன் குன்னத்தூர் வார சந்தைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஆட்டை திருடி சென்ற வாலிபர் ஆடுகளை விலை சொல்லி விற்க முயன்றுள்ளார். உடனடியாக அவரை பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதம் (27) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஆடுகளை திருடி விற்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article