ஆடிட்டர் ஆக வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளை பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போதே பலரும் கேட்கிறார்கள் ஆடிட்டர் ஆவதற்கான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் என அழைக்கப்படும் ஆடிட்டர் தொழில் செய்வதற்கான பயிற்சியை "தி இன்ஸ்டிட்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா" (The Institute of Chartered Accounts of India) என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. சி.ஏ. என அழைக்கப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பை முடித்தவர்களுக்கு, Financial Reporting, National and International Taxation, Financial and Corporate Law போன்ற துறைகளில் மிகச்சிறந்த பணிவாய்ப்புகள் உள்ளன.
அரசுத்துறை, கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. ஜி.எஸ்.டி., இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபின்பு தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சேவை அமைப்புகள் போன்றவற்றில் வரிகளின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்கு ஆடிட்டர்களின் ஆலோசனைகள் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.
தொழில் நிறுவனங்கள் வரிகளை சட்டப்பூர்வமாக செலுத்துவதற்கு ஆடிட்டர்கள் பெருமளவில் உதவுகிறார்கள். மேலும் ஒரு நிறுவனத்தின் நிதி நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கும், துறைகளின் தணிக்கைகளுக்கு துணைநிற்கவும், தொழில்முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கவும், ஜி.எஸ்.டி. பற்றிய ஆலோசனைகள் அவசியமாகிவிட்டது.
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பு (CHARTERED ACCOUNTANT COURSE)
கணக்கியல் (Accounting), நிதி (Finance) மற்றும் தணிக்கையியல் (Auditing)போன்ற துறைகளில் சிறந்து விளங்க உதவும்வகையில் அருமையான பயிற்சிகளை வழங்கும் படிப்பாக திகழ்வது "சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பு" (Chartered Accountant) ஆகும்.
உலக அளவில் புகழ்பெற்ற சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் கோர்ஸ் என்னும் படிப்பை இந்தியாவில் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்திவரும் அமைப்பு "தி இன்ஸ்டிட்டிட்டியூட் ஆஃப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா" (The Institute of Chartered Accounts of India) ஆகும்.
சி.ஏ. படிப்பில் 2 முறைகளில் சேருவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அவை -
1.பவுண்டே~ன் கோர்ஸ் (Foundation Course)
2.டைரக்ட் என்ட்ரி (Direct Entry) - ஆகியவை ஆகும்.
1.பவுண்டேஷன் கோர்ஸ் (Foundation Course)
பவுண்டேஷன் கோர்ஸ் (Foundation Course)என்பது அடிப்படை வகுப்பு ஆகும். இந்த வகுப்பில் பிளஸ் 2 முடித்தவர்கள் எந்தப் பாடப்பிரிவை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்திருந்தாலும் சேர்ந்து படிக்கலாம்.
2.டைரக்ட் என்ட்ரி (Direct Entry)
டைரக்ட் என்ட்ரி என்பது நேரடியாக பட்டப்படிப்பை முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேருவதற்கான வழிமுறையாகும். இதன்படி இண்டர்மீடியட் கோர்ஸ் (Intermediate Course) படிப்பில் பட்டதாரிகள் நேரடியாக சேர்ந்து ஆடிட்டர் படிப்பைத் தொடரலாம்.
இந்த இண்டர்மீடியட் கோர்ஸ் படிப்பில் சேருவதற்கு வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் (Commerce Graduates) 55 சதவிகித மதிப்பெண்கள் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இதரப்படிப்புகளான - பி.பி.ஏ., பி.எஸ்சி., பி.ஏ., பி.சி.ஏ., பி.இ., பி.டெக்., போன்றவற்றில் பட்டம் அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும்.
பட்டப்படிப்பை முடித்தவர்களும், பட்ட மேற்படிப்பை முடித்தவர்களும் இந்த "பவுண்டேஷன் தேர்வு" எழுத வேண்டிய அவசியமில்லை. இவர்கள் நேரடியாக "இண்டர் மீடியட் தேர்வு" எழுதி இந்தப் படிப்பை தொடரலாம்.
பவுண்டேஷன் தேர்வு(Foundation Exam)
சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பில் சேர விரும்புபவர்கள் முதலில் பவுண்டேஷன் கோர்ஸ் எழுத தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்கூட இந்தப்படிப்பில் சேர தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். பெயர் பதிவுசெய்ய www.icai.org என்னும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
"பவுண்டேஷன் தேர்வு" எழுத விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் கண்டிப்பாக 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
"பவுண்டேஷன் தேர்வு" ஒரு அடிப்படை நிலை தேர்வு என்பதால், மிகவும் எளிதான முறையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பவுண்டேஷன் தேர்வில் -
PAPER SUBJECTS MARKS
PAPER 1 Accounting - 100
PAPER 2 Business Laws -100
PAPER 3 Quantitative Aptitude -100
- Business Mathematics
- Logical reasoning
- Statistics
PAPER 4 Business Economics -100
- ஆகிய பாடங்கள் இடம்பெறும். இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே "இண்டர்மீடியட் தேர்வு" (Intermediate Exam)எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
"இண்டர்மீடியட் தேர்வு" (Intermediate Exam)
"பவுண்டேஷன் தேர்வு" வெற்றி பெற்றவர்கள் "இண்டர்மீடியட் தேர்வு" எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். கீழ்க்கண்ட பாடங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
PAPER SUBJECTS MARKS
GROUP I
Paper 1 Advanced Accounting 100
Paper 2 Corporate and Other Laws 100
Paper 3 Taxation Section
A - Income-tax Law
Section B
- Goods and Services Tax (GST) 50 50
GROUP II
Paper 4 Cost and Management Accounting 100
Paper 5 Auditing and Ethics 100
Paper 6A Financial Management 50
Paper 6B Strategic Management 50
இண்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இறுதித் தேர்வு (Final Exam) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இறுதித் தேர்வு (Final Exam)
PAPER SUBJECTS MARKS
GROUP I
Paper 1 Financial Reporting 100 (MARKS)
Paper 2 Advanced Financial Management 100 (MARKS)
Paper 3 Advanced Auditing, Assurance and Professional Ethics 100 (MARKS)
GROUP II
Paper 4 Direct Tax Laws and International Taxation 100 (MARKS)
Paper 5 Indirect Tax Laws 100 (MARKS)
Paper 6 Integrated Business Solutions (Multi-disciplinary case study involving Papers 1 to 5 at the final level along with Self-Paced Online Modules Sets A and B and Strategic Management) 50 (MARKS)
இணையவழி சுய வேகக்கற்றல் (Self-Paced Online Modules)
இணையதளத்தின் (Online) உதவியோடு பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு விரைவாக கற்றுக்கொள்ளும் நிலையை "இணையவழி சுய வேகக்கற்றல்" (Self-Paced Online Modules) என அழைக்கலாம்.
அதாவது - ஒரே மாதிரியான கற்றல் முறையை பின்பற்றாமல், பாடத்தின் தலைப்பு மற்றும் பிரிவுகளுக்கு ஏற்ப தேர்வு எழுதுபவர்கள் தாங்களாகவே பாடங்களைப் படித்துக்கொள்ளும் முறை ஆகும்.
வழக்கமாக வகுப்பறையில் கற்றுக்கொள்ளும் நிலையைத் தவிர்த்து, சுயமாக தேர்வு எழுதுபவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும்போது, தங்களது கற்றல் திறனை அதிகளவில் வளர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், படிப்பதற்கு அவர்களாகவே சொந்த அட்டவணையை உருவாக்கி படிக்கும் வசதி இருப்பதால், இவ்வகைக் கற்றலில் கவனச்சிதறல் மிகக் குறைவாக இருக்கும்.
கீழ்க்கண்ட பாடங்களை இணையவழி சுய வேகக்கற்றல் முறையின்மூலம் தேர்வு எழுதுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
PAPER SUBJECTS MARKS
SET A Corporate and Economic Laws (Compulsory) -100 MARKS
SET B Strategic Cost and Performance Management [Compulsory] -100 MARKS
SET C Elective (Choose one module)
1. Risk Management
2. Sustainable Development and Sustainability Reporting
3. Public Finance and Government Accounting
4. The Insolvency and Bankruptcy Code, 2016
5. International Taxation
6. The Arbitration and Conciliation Act, 1996
7. Forensic Accounting
8. Valuation
9. Financial Services and Capital Markets
10. Forex and Treasury Management 100 (MARKS)
SET D -100 (MARKS)
Towards developing inherent traits of CA students and incorporating Multi- disciplinary approach envisaged in NEP, 2020] (Choose one module)
1. The Constitution of India and Art of Advocacy
2. Psychology and Philosophy
3. Entrepreneurship and Start-Up Ecosystem
4. Digital Ecosystem and Controls
மேலும் விவரங்களுக்கு -
Southern India Regional Council of The Institute of Chartered Accountants of India
'ICAI BHAWAN',
122,M.G. Road,
Post Box No.3313,
Nungambakkam,
Chennai - 600 034
Phone: 044-39893989,30210300
Fax:044-30210355,
E-mail: [email protected]
-என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.