ஆசைவார்த்தைக்கு மயங்கி கர்ப்பமான பெண், காவல்நிலையத்தில் முறையீடு

1 day ago 3

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; அண்ணாநகரில் வசித்துவரும் எனக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து ஆகி பிரிந்துவிட்டோம். தற்போது எனது குழந்தையுடன் தனியாக வசிக்கிறேன். அண்ணாநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன்.

அந்த கம்பெனி மேனேஜர், எனது கஷ்டங்களை தெரிந்துகொண்டு ஆறுதலாக பேசுவதுபோல் பேசி நட்பாக பழகினார். தற்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். இதன்பிறகு திருமணம் செய்துகொள்ளும்படி மேனேஜரிடம் பலமுறை கேட்டபோதும் மறுத்து வருகிறார். எனவே திருமணம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய மேனேஜர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஆசைவார்த்தைக்கு மயங்கி கர்ப்பமான பெண், காவல்நிலையத்தில் முறையீடு appeared first on Dinakaran.

Read Entire Article