
திருச்சூர்,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பெரும்பெட்டி பகுதியை சேர்ந்தவர் கெவின் தாமஸ் (வயது 22). இவருக்கும், திருச்சூர் ஒல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவர் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று, கெவின் தாமஸ் தனது செல்போனில் ஆபாச புகைப்படம் எடுத்து உள்ளார்.
இதையடுத்து ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் ஒல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விமோல் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளம்பெண்ணை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பதை அறிந்த கெவின் தாமஸ் தலைமறைவானார். இந்தநிலையில் எர்ணாகுளம் பள்ளி முக்கு பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.