வேலூர்:17:காட்பாடியில் பட்டப்பகலில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.காட்பாடி கழிஞ்சூர் மதிநகர் 6வது தெருவை சேர்ந்தவர் பத்மாவதி(52). இவர் வேலூர் ஈ.வெ.ரா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தினமும் காலையில் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 14ம் தேதி காலை ஆசிரியை பத்மாவதி பள்ளிக்கு சென்றார்.மாலையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2.5 சவரன் தங்க நகைகள், வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
The post ஆசிரியை வீட்டின் பூட்டு உடைத்து நகைகள் திருட்டு appeared first on Dinakaran.