ஆசிரியர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

3 months ago 21

பெரம்பலூர்,

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தரப்படும்.

பள்ளியின் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் தடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் முறையில் தலைமை பண்பை வளர்க்கின்ற விதமாக மாதிரி சட்டமன்றம், மாதிரி நாடாளுமன்றம் ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்கள் மீது புகார்கள் வந்தால் அவற்றில் உண்மை, தன்மை இருக்கின்றபட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article