சிவகங்கை, ஜன.6: காளையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை நிர்வாகிகள் அமலசேவியர், பஞ்சுராஜ், சேவியர் சத்தியநாதன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், ஜான்கென்னடி, ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு மாறாக ஆசிரியர்களுக்கு தேவையற்ற நெருக்கடி கொடுப்பதை நிறுத்த வேண்டும். தூத்துக்குடி நாடார் மேல்நிலைப் பள்ளியில் வருமான வரி பிடித்தம் செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து ஜன.7ல் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரியர்கள் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.