ஆசிய தடகள போட்டி: தங்கம் வென்ற இந்திய வீரர் குல்வீர் சிங்

1 day ago 4

குமி,

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடந்து வருகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

Read Entire Article