ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு

4 hours ago 2

புதுடெல்லி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. ஐ.சி.சி. தொடர்களில் ஆசிய அணிகள் சிறப்பாக செயல்படும் பொருட்டு இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆசிய கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் கடந்த மாதம் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த இந்த சண்டையில் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேவேளை, கடந்த 10ம் தேதி இருநாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்க தலைவராக பாக். மந்திரி மொசின் நக்வி பதவி வகிக்கும் நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் பிசிசிஐ தெரிவித்துள்ளது என கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article