ஜிங்டாவ்: சீனாவில் நடைபெறும் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் டி பிரிவில் உள்ள இந்தியா- மக்காவ் சீனா அணிகள் மோதின. அவற்றில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் கருணாகரன்-அடயா வரியத் இணை 21-10, 21-9 என நேர் செட்களில் வென்றது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவுகளில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-16, 21-12 என நேர் செட்களிலும், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சூட் 21-15, 21-9 என நேர் செட்களிலும் வெற்றி பெற்றனர்.
மேலும் ஆண்கள், பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் இந்திய வீரர்கள் அர்ஜூன்-சிராக் ஷெட்டி இணை 21-15, 21-9 என நேர் செட்களிலும், இந்திய வீராங்கனைகள் திரிசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை 21-10, 21-5 என நேர் செட்களிலும் வெற்றி வாகை சூடினர். இப்படி, 5 ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் மக்காவ் அணியை வீழ்த்தியதால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு சுற்றில் கொரியா அணியுடன் இந்தியா மோத உள்ளது.
The post ஆசிய கலப்பு அணி பேட்மின்டன்: இந்திய வீரர்கள் அபாரம்; 5ல் வென்று அசத்தல் appeared first on Dinakaran.