ஆசிப் அலியின் "சர்கீட்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

2 days ago 1

'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு , நடிகர் ஆசிப் அலி நடித்த 'ரேகாசித்திரம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது மிராஜ் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஆசிப் அலி நடித்துள்ளார். 'கூமன்' படத்தின் வெற்றி பிறகு, இப்படத்தில் ஜீத்து ஜோசப் மற்றும் ஆசிப் அலியின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த நிலையில், ஆசிப் அலி நாயகனாகவும் திவ்ய பிரபா நாயகியாகவும் நடித்த சர்கீட் திரைப்படம் மே 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் தமர் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Read Entire Article