ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம் - ராகுல் காந்தி

22 hours ago 1

புதுடெல்லி,

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதி எம்.பி.,யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

பட்டியலின, பழங்குடியின மற்றும் விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் படித்து விடக்கூடாது என பாஜக- ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. ஆங்கிலம் படித்தால் எந்த மாநிலத்திற்கும், எந்த நாட்டிற்கும் வேண்டுமானாலும் சென்று பணிபுரிய முடியும். ஆங்கிலம் மிகப்பெரிய ஆயுதம். நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டுவிட்டால் எங்கும் செல்லலாம். தமிழ்நாடு, ஜப்பான், மும்பை அல்லது உலகின் எந்த ஒரு நிறுவனத்திலும் நீங்கள் பணிபுரியலாம். ஆங்கில மொழிதான் அதிகாரத்தைக் கைப்பற்றவும் அடைவதற்குமான மிகப் பெரிய ஆயுதம். தாய்மொழியான இந்தியும் முக்கியம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை கற்பதும் மிக முக்கியம் என்றார். மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஆங்கிலத்தின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article