டெல்லி: ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்க கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. தங்களை நோக்கி கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலம் கற்கக் கூடாது என பாஜக நினைக்கிறது. இன்றைய உலகில் தாய்மொழியை போலவே ஆங்கிலம் முக்கியமானதாக உள்ளது. அனைத்து பிராந்திய மொழிகளும் இந்தியாவின் ஆன்மாதான்; அதே நேரம் ஆங்கிலமும் கற்க வேண்டும். குழந்தைகள் ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதையாக இருக்கும். நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது அவமானமாக கருதும் நிலை ஏற்படும் என அமித்ஷா கூறியதற்கு ராகுல் பதிலடி தெரிவித்தார்.
The post ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி..!! appeared first on Dinakaran.