ஆக்சனில் பட்டையை கிளப்பும் கவுரி கிஷன் - வீடியோ வைரல்

22 hours ago 1

சென்னை,

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை கவுரி கிஷன். இவர் தமிழில் கடந்த 2018-ல் வெளியான விஜய் சேதுபதியின் '96' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து, 'மார்க்கம்களி' என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து, 'பிகினிங்', 'அடியே' , 'போட்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவ்வாறு முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள இவர் கடைசியாக 'சுழல் 2' வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருந்தார் கவுரி கிஷன்.

இந்நிலையில், அந்த சண்டை காட்சிகளுக்கு எவ்வாறு பயிற்சி மேற்கொண்டார் என்பது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article