ஆக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன்

1 week ago 3

ரூர்கேலா,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடைபெற்றது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், சூர்மா ஆக்கி கிளப் மற்றும் ஐதராபாத் டூபான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதியில் தமிழ்நாடு டிராகன்சை வீழ்த்தி ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியும், சூர்மா ஆக்கி கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் டூபான்ஸும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் - ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதியில் பெங்கால் டைகர்ஸ் அணி அபாரமாக விளையாடி அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. ஐதராபாத் அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் பெங்கால் டைகர்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.

பெங்கால் தரப்பில் ஜுக்ராஜ் சிங் 3, கோல்களும் சாம் லேன் ஒரு கோலும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் கான்சாலோ பெய்ல்லாட் 2 கோல்களும், அமன்தீப் லக்ரா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியை வீழ்த்தி சூர்மா ஆக்கி கிளப் வெற்றி பெற்றது.

Read Entire Article