ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுபதிவுக்கு தடை கோரி மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

3 months ago 15

சென்னை: திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடவடிக்கையை தொடங்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக ரூ.5 கோடியே 53 லட்சம் அளவுக்கு சொத்துகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் 2 நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.

Read Entire Article