அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம்: ஸ்டீவ் ஸ்மித்

7 months ago 22

பெர்த் ,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்த தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு எதிராக கவனமுடன் விளையாடுவது அவசியம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

ஆஸ்திரேலிய மண்ணில் ஆப் ஸ்பின்னில் ஆட்டமிழப்பதை நான் விரும்பவில்லை. அஸ்வின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் நல்ல திட்டங்களுடன் வருவார்.  சில தருணங்களில் எனக்கெதிராக அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். அவரை கவனமுடன் எதிர்கொண்டு அவர் விரும்பும் விதத்தில் பந்துவீச அனுமதிக்காமல் இருப்பது அவசியம் .என தெரிவித்துள்ளார். 

Read Entire Article