அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவை தொடர்ந்து வெளியாகும் டாம் ஹாலண்டின் 'ஸ்பைடர் மேன் 4'?

2 months ago 14

வாஷிங்டன்,

'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' என்ற படத்தை இயக்க உள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜுனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படம் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே வெளியாகி 2 மாதத்தில் டாம் ஹாலண்ட் நடிக்கும் ஸ்பைடர் மேன் 4 வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஸ்பைடர் மேன் 4 2026-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல், கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிக்க உள்ள படமும் அதே ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article