சென்னை,
ஸ்பைடர் மேன், பேட்மேன், அயன்மேன், ஹல்க், தார், உள்பட சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வசூலையும் வாரி குவிக்கின்றன. அவஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவெஞ்சர்ஸ் பட வரிசையில் தற்போது 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' என்ற படம் தயாராகி வருகிறது.
'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தை இயக்க உள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜுனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் வரும் 2026-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவெஞ்சர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்து புகழ் பெற்ற கிறிஸ் எவன்ஸ் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், கேப்டன் அமெரிக்காவில் அவரது காதலியாக நடித்த ஹேலி அட்வெல் கேப்டன் கார்ட்டராக நடிக்கிறார்.