அவல் இடியாப்பம்

3 months ago 24

தேவையான பொருட்கள் :

அவல் – 5 கப்
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பெரிய துளை உள்ள சல்லடையில் அவல் சேர்த்து லேசாக சலித்து கொள்ளவும். பின் அவல் வாணலியில் அவல் சேர்த்து கைகளால் அழுத்திப் பார்த்தால் நொடியும் அளவிற்கு கலர் மாறாமல் வறுக்கவும். பின் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி மையாக அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1 கப் தண்ணீர் வீதம் 4.5 கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.பின்னர் வேகவைத்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி குளிர் நீரில் கைகளை நனைத்து நன்றாக அழுத்தி உருண்டை பிடிக்கவும். இனி ஒவ்வொரு உருண்டைகளாக இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. எப்பொழுதும் போல் தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.

The post அவல் இடியாப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article