சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மாபில்லிபாளையம் என்ற பகுதியில் ஒரு மூதாட்டி நடந்து சென்ற போது அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றார். இது தொடர்பாக சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை இதேபோல ஒரு சம்பவம் சங்ககிரி பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றபோது நரேஷ்குமார் என்ற இளைஞர் போலீசாரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் போலீசாரை தாக்குயுள்ளார். இதில் காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நரேஷ்குமாரின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான நரேஷ்குமார் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
The post சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை சுட்டுப்பிடித்த போலீசார் appeared first on Dinakaran.